சூளைமேடு சூட்டுச் சம்பவம்
தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு தமிழகத்தில்
தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 21ம் திகதி
வழங்கப்படவுள்ளது.
இம் மனு நேற்று சென்னை மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.மோஹன்ராம் மற்றும் ஜீ.எம்.அக்பர் அலி தலைமையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 21ம் திகதி வழங்கப்படும் என தெரிவித்தனர். இவ் வழக்கினை தமிழக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பி.புகழேந்தியினால் கடந்த 1994ம் ஆண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை 1986ம் ஆண்டு சுட்டு கொலை செய்யதார் என்று குற்றம் சட்டப்பட்டு டக்ளஸ் தேவானாந்தா மீது சூளைமேடு காவற்துறையினரால் 1987ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் 1994ம் ஆண்டு முதல், டக்ளஸை தேடப்படும் குற்றவாளியாக உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. |