ஆஸ்திரேலியாவில்
நடந்து வரும் காமன்வெல்த் சீரிஸ் கோப்பைக்கான போட்டியில் நேற்று இந்திய அணி
ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில்
பேட் செய்ய தீர்மானித்தது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின்
டெண்டுல்கர் மற்றும் ப்ரவின் குமார் இருவருக்கும் ஓய்வு தரப்பட்டது.
முதலில்
பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்
இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. இதில் ஹுஸ்ஸே 72 ரன்களும்,ஃபாரஸ்ட் 66
ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜாகிர்கான் ஒரு விக்கெட்டும்,
வினய்குமார் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.
பின்னர்
270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 49.6
ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. காம்பீர் 92 ரன்களும்,
கேப்டன் தோனி அவுட் இல்லாமல் ரன்களும் எடுத்து, அணியை வெற்றிப்பாதைக்கு
அழைத்துச் சென்றனர்.
காம்பீர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.