ராகம
பிரதேசத்தில் அண்மைக் காலமாகப் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்த கொலைகாரன்
ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் யாருமல்ல.. முதலை ஒன்றுதான்.
19 அடி நீளமான இந்த முதலை அண்மையில் புல் வெட்டச் சென்ற இளைஞர் ஒருவரைக்
கொன்று தனது வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டதுடன் இந்தப்
பிரதேசத்திலுள்ள ஆடுகள், நாய்கள் போன்றனவற்றையும் வேட்டையாடி வந்த
நிலையில்நேற்று (08) இந்த முதலை ஊர்மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலையைப் பிடிக்கும் பிரயத்தனத்தின் போது இரு இளைஞர்கள்
காயமடைந்தனர். தற்போது இந்த முதலை வன பரிபாலனத் திணைக்களத்திடம்
ஒப்படைக்கப்படவுள்ளது.