நேற்று முன்தினம் 58 ஆயிரம் தடுப்பூசுகள் இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் இன்று மருத்துவ விநியோகப் பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நடவடிக்கையால் இந்த வருடம் நீர் வெறுப்பு நோய் தடுப்பூசி தேவையின் 50 வீதத்தை பூர்த்தி செய்ய முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாய்களுக்கு ஏற்றப்படும் நீர் வெறுப்பு நோய் தடுப்பூசிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என மருத்துவ விநியோகப் பிரிவு அறிவித்துள்ளது.