தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மொஹஞ்சதாரோ நகரில் செய்தியாளர்களிடம்
பேசிய பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர் தெரிவித்ததாவது:
சலலெய்ன் மொஹமது பழங்குடியினப் பகுதியில் உள்ள இரண்டு எல்லைச் சாவடிகளில்
நிகழ்ந்த வான் தாக்குதல் ஒரு பயங்கரான சம்பவமாகும். அதுபோன்று மீண்டும்
நடைபெறக் கூடாது. அது வேண்டுமென்ற நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.
அந்த சம்பவத்துக்காக அமெரிக்க மக்கள் மிகவும் வருந்தினர். அதைப்போன்று எதிர்காலத்திலும் நிகழாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே இதுதொடர்பாக அமெரிக்கா பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த விரும்புகிறது. பேச்சு விரைவில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி நிகழ்ந்த இந்தத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் கடுமையாக நடந்துக் கொண்டது. ஆப்கானுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் பாகிஸ்தான் மூடிவிட்டது. இதனால் அங்குள்ள தனது துருப்புகளுக்கு இராணுவ உதவி பொருள்களை அமெரிக்காவால் அனுப்ப முடியாமல் போனது.
மேலும் ஷாம்ஷி விமான தளத்திலிருந்து வெளியேறுமாறும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டது. இதனால் இருதரப்பு உறவிலும் பின்னடைவு ஏற்பட்டது.
இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே தொடர்புகளில் ஏற்பட்ட தோல்வியே இதற்குக் காரணம் என்று அமெரிக்க இராணுவம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதை நிராகரித்த பாகிஸ்தான், தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயல் என்று குற்றம் சாட்டியிருந்தது.