இன்று முதல் ஜனாதிபதி மாளிகைக்கு சூரிய சக்தி மின்சாரத்தைப்
பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காகப்
பொருத்தப்பட்டுள்ள ஆழியை ஜனாதிபதி இயக்கி மின்சார இணைப்பை ஏற்பாடுத்தினார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையின் மின்சாரத் தேவையில் 10 வீதத்தை சம்பிரதாய
முறையல்லாத வேறு மூலங்களிலிந்து பெறப்பட வேண்டும் என்ற மஹிந்த சிந்தனை
கோட்பாட்டுக்கு இணங்கவே இந்த திட்டம் ஜனாதிபதி மாளிகையில் இன்று
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி
சம்பிக ரணவக்க- பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர- இலங்கை தனியார மின்சார
நிறுவனத்தின் தலைவர் சந்தன ஹப்புதந்திரி ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள்
கலந்துகொண்டனர்.