தெற்கு அதிவேக
நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளை ஆராயும் பொருட்டு இன்று
கூடியுள்ள நாடாளுமன்றத் தொடரில் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில், நெடுஞ்சாலை
திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை 151 மில்லியன் ரூபா வருமானம்
ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள்
பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாவும், ஆரம்பத்திலிருந்து இன்று வரை 151 மில்லியன் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நிர்மல கொத்தலாவல. மேலும்,ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாகனத் தொடரணிகள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கு தேசிய பொதுச்சாலைகள் சட்டத்தின்கீழ் விலக்களிக்கப்பட்டும், ஏனைய வாகனங்களுக்கு அவற்றின் வகை மற்றும் பயணத் தூரம் என்பவற்றுக்கேற்ப 150 ரூபா முதல் 2000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டும் வருகின்ற நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 151 மில்லியன் ரூபா வருமானமாம்: நிர்மல கொத்தலாவல தெரிவிப்பு;விவாதம் நாடாளுமன்றில்!
Labels:
இலங்கை