

வைத்தியசாலையில் சேவையாற்றும் சக வைத்தியர் ஒருவரின் வழிகாட்டலில் இந்த ஊழியர் நீர்த் தாங்கியில் விஷம் கலந்துள்ளதாக செவனகல வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் சமிந்த விதானகே குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக மொனராகலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைத்தியரிடம் நியூஸ் பெஸ்ட் வினவியதை அடுத்து இந்த விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக செவனகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்வம் தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் திணைக்கள மட்டத்திலான விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக மொனராகலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ.டி.கே. அதிகாரி கூறினார்.



