
மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கச்சதீவை தாம் மீட்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாக தி ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.ஆறுமுகம் கச்சதீவு தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார், இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் , கச்சதீவு விவகாரம் தொடர்பிலான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற வகையில் ஜெயலலிதா இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தி ஹிந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



