
பொது
மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போதுää ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று
உடையணிந்து மாணவர்கள் தோற்றம் அளிக்க அனுமதிக்கக் கூடாது என மத்திய மாகாண
முதலமைச்சர் சரத் எக்கநாயக்க மத்திய மாகாண பாடசாலைகளுக்கு உத்தரவு
பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சுற்று நிருபம் ஒன்றை அனைத்துப்
பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் மாகாண கல்விச் செயலாளருக்கு
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விசேடமாக, இந்த மாகாணத்தைச் சேர்ந்த
முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் பொது மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி
மஹிந்த போன்று உடையணிந்து தோற்றமளிப்பது ஜனாதிபதியைக் கேலி செய்வது போன்று
உள்ளது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளத (வர்மா)