இலங்கையின் முதலாவது ஈபுக் ஸ்ரோர் அறிமுகம்

இலங்கையின் முதலாவது ஈபுக் ஸ்ரோர் அறிமுகம்

புத்தக வெளியீட்டு நிறுவனமான எம்.டி.குணசேன மற்றும் மொபைல் தொழில்நுட்ப தீர்வைகளை வழங்கும் நிறுவனமான மைக்குரோ இமேஜ் ஆகியவற்றுடன் இணைந்து வாசிப்புத்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த எடிசலாட் முன்வந்துள்ளது.

இலங்கையின் முதலாவது ஈபுக் ஸ்டோரினையும் ஈபுக் ரீடரையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் இலக்கியத்துறைக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு பிரத்தியேக கனிணி, அன்ட்ரொயிட் அல்லது அப்பிள் கையடக்க தொலைபேசிகளின் மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஈபுக் ஸ்ரோர் அனைத்து வலையமைப்பை சேர்ந்த பாவனையாளர்களுக்கும் இலவசமாக உட்புகக்கூடிய வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஈபுக் ஸ்ரோரில் உள்நாட்டில் வெளியிடப்படும் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல புத்தகங்களை டிஜிட்டல் முறையில் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தமது பீசி, டப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களிள் ஊடாக இந்த ஸ்ரோருக்கு விஜயத்தை மேற்கொண்டு தமக்கு விருப்பமான ஈபுக்களை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த புக்ஸ்ரோரில் கல்விசார் வெளியீடுகள், சஞ்சிகைகள், பிள்ளைகளுக்கான புத்தகங்கள், சமய சார்பான விடயங்கள், வர்த்தக மஞ்சரிகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில், பாடசாலை புத்தகங்கள் மற்றும் பத்திரிகைககள் போன்றவற்றையும் உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், “ஈபுக் றீடர்கள் மற்றும் ஈபுக் ஸ்ரோர்கள் போன்றன சர்வதேச ரீதியில் புகழ்பெற்று வருகின்றன. இவற்றின் அனுகூலங்களை இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் வழங்க நாம் முன்வந்துள்ளோம். இந்த புதிய தொழில்நுட்பம், வாசகர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிமுகம் செய்துள்ளோம். சர்வதேச ரீதியில் அணுகக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்ப சேவையை நாம் வடிவமைத்துள்ளமையினால், எமது படைப்புகள் சர்வதேசத்துக் கொண்டு செல்வதற்கான ஒரு அடித்தளமாகவும் அமைந்துள்ளது” என்றார்.

இந்த தொழில்நுட்ப சேவை குறித்து எம்.டி.குணசேன பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் பதில் முகாமைத்துவ பணிப்பாளர் ரஜீவ் குணசேன கருத்து தெரிவிக்கையில், “எமது நிறுவனம் இலங்கையில் புத்தகங்களை வெளியிடுவதில் முன்னணியில் திகழ்கிறது. புத்தக வெளியீட்டில் நாம் புதிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியிருந்தோம். தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பெருமளவு மாற்றங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கத்திலும் இந்த தொழில்நுட்பத்தை எம்மால் புகுத்த முடிந்துள்ளது” என்றார்.

இந்த ஈபுக் ஸ்ரோர்களில் விற்பனையாகும் புத்தகங்களின் விலை, சாதாரண புத்தகங்களின் விலையிலும் குறைவானதாக அமைந்திருக்கும். சர்வதேச ரீதியில் இந்த ஈபுக் ஸ்ரோர்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளமைக்கு காரணம் பாரம்பரிய முறையில் புத்தகக் கொள்வனவில் ஈடுபடுகின்றமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையாகும்.. வாசிப்பு பிரியர்கள் இனி தமக்கு விருப்பமான புத்தகங்களை கொள்வனவு செய்ய புத்தகசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தமது கையடக்க தொலைபேசியூடாகவே, வீட்டிலிருந்தவாறு இந்த ஈபுக்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும். இந்த ஈபுக்களை ஈ-வொல்லட் முறை ஊடாக கொள்வனவு செய்ய முடியும்.

இந்த ஈ-வொலட்டுக்குரிய பணத்தை எடிசலாட் றீலோட் மூலமாக அல்லது கடன் அட்டைகள் மூலமாக எந்தவொரு வலையமைப்பிலும் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். மைக்குரோஇமேஜ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹர்ஷ புரசிங்க கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் இந்த அச்சுப்பிரதி துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இதர இரு பிரதான ஜாம்பவான்களுடன் இணைந்து கொண்டுள்ளமையையிட்டு பெருமையடைகிறோம். இந்த ஈ-புக் ஸ்ரோர் மற்றும் ஈபுக் றீடர் அறிமுகத்தின் மூலம் இலங்கையின் டிஜிட்டல் துறையை மேலும் ஒரு படிக்கு நகர்த்த எம்மால் முடிந்துள்ளது” என்றார்.

இலங்கையிலுள்ள முன்னணி புத்தக வெளியீட்டு மற்றும் விற்பனை நிலையமான எம்.டி.குணசேன, 1930ஆம் ஆண்டு முதல் தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எடிசலாட் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஒன்லைன் புக் ஸ்ரோருக்கு தேவையான புத்தக உள்ளடக்கங்களை வழங்க முன்வந்துள்ளது. இவர்களின் மூலம் இலங்கையின் புத்தக வெளியீடுகள், இலத்திரனியல் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மைக்குரோஇமேஜ் நிறுவனம், முன்னணி, விருதுகள் பெற்ற தொழில்நுட்பதுறை சார்ந்த நிறுவனமாகும். பிராந்திய ரீதியில் தனது செயற்பாடுகளை கொண்டுள்ளதுடன், மொபைல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. GSMA விருது மற்றும் றுளுயு மொபைல் விருது போன்ற பெரும் மதிப்புக்குரிய விருதுகளை இந்நிறுவனம் வென்றுள்ளது. இந்த ஈபுக் றீடர் மற்றும் ஒன்லைன் புக் ஸ்ரோர் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் ஃபோன்கள், டப்லெட்கள் மற்றும் பீசிகளில் பார்வையிடுவதற்கான ஆப்ளிகேஷன் வடிவமைப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now