பயிற்சிக்காக சென்ற இலங்கை தாதியர்களையும் விரட்டியடித்த இந்திய தமிழர்கள்

பயிற்சிக்காக சென்ற இலங்கை தாதியர்களையும் விரட்டியடித்த இந்திய தமிழர்கள் கோவையில் இலங்கை தாதியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரியவைத்திய மருந்தகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெரியார் தி.க. நிர்வாகிகளை பொலிஸார் கைது செய்தனர்.

கோவையை அடுத்த நவக்கரையில் ஆரியவைத்திய மருந்தகம் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த 5 தாதியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர் ஆரிய வைத்திய சாலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற இலங்கை தாதியர்கள் 5 பேரும் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஆரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும், கோவையில் இலங்கை தாதியர்களுக்கு பயிற்சி அளித்ததை கண்டித்து கோவையிலுள்ள உள்ள ஆரிய வைத்தியசாலை முன்பு பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த வைத்தியசாலையை நடத்தி வருபவர் தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறார். டேம் 999 படத்தை எடுத்த இயக்குநருக்குப் பாராட்டு விழா நடத்தியவர் இந்த கேரளக்காரர்.

அதேபோல இப்போது தமிழ் இனத்தை அழித்த இலங்கையைச் சேர்ந்த தாதியர்களை கூட்டி வந்து பயிற்சி அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு முன்னதாக இலங்கை மருத்துவர்களுக்கு, இந்தியாவில் பயற்சி வழங்கப்பட்ட வேளையிலும் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now