கடந்த
ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பூகம்பமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்ட
ஜப்பானில் இப்போது பேய் பீதி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானின் இஷினோமகி, புகுஷிமா ஆகிய
நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள்
இடிந்ததில் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். புகுஷிமா அணு உலை வெடித்ததில்
கதிர்வீச்சு பரவியது. தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் பேயாக மாறி பொதுமக்களை
பயமுறுத்தி வருவதாக இஷினோமகி நகரில் கடும் பீதி நிலவுகிறது. இறந்தவர்களின்
சத்தங்கள் மற்றும் அலறல்கள் கேட்பதாக பலர் கூறி வருகின்றனர். இதனால்
ரோட்டில் நடமாட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே பூகம்பம் மற்றும் சுனாமியால் பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைய பரிகார பூஜைகள் செய்வதில் மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளனர்.