இந்திய
அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓட்டம் எடுக்க
முற்படுகையில், நான் வேண்டுமென்றே அவரை தடுக்கவில்லை என்று அவுஸ்திரேலிய
அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீ கூறியதாவது, இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் தான், நான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்று கூறினார்.
சச்சின்
ஓட்டம் எடுப்பதற்காக ஓடும் போது குறுக்கே லீ வந்ததாகவும், இதற்காக சச்சின்
வளைந்து ஓடியதாலேயே அவர் ஆட்டமிழந்ததாகவும் இந்திய அணித்தலைவர் தோனி
குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்
மைக்கேல் ஹசி ஆட்டமிழப்பதை தடுப்பதற்காக பந்தை கையில் பிடித்துவிட்டு,
காயம் ஏற்படாமல் தடுக்கவே பந்தை தொட்டதாக கூறியிருப்பதும் இந்திய அணியின்
தோல்விக்கு காரணம் என தோனி குறிப்பிட்டிருந்தார்.
நேற்று
நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 87 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, இறுதிப்போட்டிக்கு தகுதி
பெறும் வாய்ப்பை பெருமளவு இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.