கடற்றொழில்
நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நீர்கொழும்பு மற்றும் சிலாபம் மீனவர்கள்
மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு கடற்கரை
வீதி மற்றும் குடாபாடுவ ஒன்றிணைந்த கடற்தொழில் சங்கம்
தெரிவித்துள்ளது.மண்ணெண்ணையை முன்னைய விலைக்கே மீன்வர்களுக்கு வழங்குவது
என்றும் அதற்கான சுற்று நிருபம் வெளியிடுவது என்றும் உறுதிமொழி
வழங்கப்பட்டதனையடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன
மற்றும் மேல் மாகாண கடற்தொழில் அமைச்சர் நிமல் லன்சா ஆகியோருடன் இன்று
பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக
சங்கத்தின் தலைவர் டென்ஸிஸ் பெணான்டோ தெரிவித்துள்ளார்.