சமையல்
எரிவாயுவின் விலைகளை அதிகரிக்குமாறு இரண்டு நிறுவனங்களினால் கூட்டுறவு
மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சில வாரங்களில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் எரிவாயுவின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.