தெஹிவளை
மிருகக்காட்சி சாலையிலிருந்த ஒட்டகமொன்று கர்ப்பமாகியுள்ளதாக கருதி அதற்கு
சிகிச்சை அளிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளது. மிருக வைத்தியர் ஒருவரின்
அறிவுறுத்தலின்படி இச்சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் மேற்படி ஒட்டகம் கர்ப்பமடையவில்லை என்பது
பின்னர்கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒட்டகம் இறந்தமை குறித்து முழுமையான
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு;ளதாக மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர்
பிரபாஷ்வர சேக குணரட்ன தெரிவித்தார்.
மருத்துவரின் கட்டணம், மருந்துகள் உட்பட இச்சிகிச்சைக்கு சுமார் 60,000
ரூபா செலவிடப்பட்டுள்ளது. ரோஸி எனப் பெயரிடப்பட்ட 8 வயதான இந்த ஒட்டகம்
ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். பிந்து எனப் பெயரிடப்பட்ட அதன் துணை
இப்போது தனித்துள்ளது.