கொள்ளுபிட்டி காலி வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முதலாம் மாடி அறையொன்றில் இருந்து தமிழ் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஹோட்டலின் முதலாம் மாடி அறையொன்றில் நபர் ஒருவருடன் குறித்தப் பெண் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012-02-23ம் திகதி தொடக்கம் 2012-02-28ம் திகதிவரை இவர்கள் தங்கியிருந்த அறை திறக்காமல் பூட்டியே கிடந்துள்ளது.
இது குறித்து ஹோட்டல் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் ஹோட்டல் நிர்வாகத்திடம் உள்ள திறப்பினால் நேற்று (28) பகல் 12.45 அளவில் அறை திறக்கப்பட்டுள்ளது.
இதன்போது அறைக்குள் உயிரிழந்த நிலையில் 48 வயதுடைய கனகசபை சுதர்ஷினி கஹீலா என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்து கிடந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடைய சொந்த முகவரி இதுவரை கண்டறியப்படவில்லை.
குறித்த பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நபர் குறித்து கொள்ளுபிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.