பால் மா விலை உயர்வு குறித்து நாளை (01) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்
என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
விலை உயர்வு குறித்த பால் மா சங்கங்களின் கோரிக்கை நுகர்வோர் அதிகார சபையின் விலை நிர்ணய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.
விலை நிர்ணய குழு நாளை (01) கூடி இறுதி முடிவை அறிவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
ரூபாவிற்கு ஏற்ப டொலர் பெறுமதி அதிகரித்துள்ளதால் பால் மா விலை அதிகரிக்கப்பட வேண்டும் என பால் மா சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதன்படி பால் மா விலை 37 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என சங்கங்கள் தெரிவித்துள்ளன.