ஆஸ்திரேலிய போட்டியைப் போலவே இந்திய அணி போராடிய பல போட்டிகளில் கடைசி
நேரத்தில் தோனியே கை கொடுத்து அசத்தியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவில்
தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வந்ததால் குவிந்து கிடந்த கடும்
விமர்சனங்களையும் இந்த வெற்றியின் மூலம் தூளாக்கியுள்ளார் டோணி.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் 4வது ஒருநாள் ஆட்டத்தில்
4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
பரபரப்பான கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட
நிலையில், டோனியின் அதிரடியால் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா
வெற்றிக் கண்டது.
கடைசி ஓவர் திரில்..
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால்
ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிளின்ட் மெக்கே வீசிய இந்த ஓவரின் முதல்
பந்தில் ரன் எடுக்கத் தவறிய அஸ்வின், 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் 3-வது பந்தை எதிர்கொண்ட தோனி, சிக்ஸர்
அடித்தார். அடுத்த பந்தையும் தோனி சிக்ஸருக்கு தூக்க, அது எல்லைக் கோட்டில்
கேட்ச் ஆனது.
ஆனால் அந்த பந்து நோ-பால் ஆனதால் ஒரு ரன் கிடைத்தது. மேலும் 2 ரன்களை
தோனி ஓடி எடுத்தார். இதனால் இந்தியாவுக்கு 3 ரன்கள் கிடைத்தன. அடுத்த
பந்தில் தோனி மேலும் 3 ரன்கள் எடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 270
ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தோனி 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 1
சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிக்ஸர் எடுத்த தோனி கூறுகையில், இந்த சிக்ஸர்
சிறப்பு வாய்ந்தது. தேவைப்பட்ட நேரத்தில் சிக்ஸர் அடித்தேன். இதேபோல்
உலகப்கோப்பையில் அடித்த சிக்ஸரும் மறக்க சிறப்பானது. உலகக்கோப்பையை
பொறுத்தவரையில் ஒரு ரன் எடுத்தாலே போதும் என்ற நிலையில் சிக்ஸர் அடித்தேன்
என்றார்.
கடந்த கால போட்டிகளில் தோனி...
# 2005-ம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து 43
பந்துகளில் 45 ரன்களை எடுத்து இந்தியாவை வெற்றி பெறச்செய்தார்
# 2006ல் பாகிஸ்தானுடனான போட்டியிலும் 46 பந்துகளை சந்தித்து 72 ரன்களை எடுத்து அவுட் ஆகாமால் சாதித்தது
#2006 ல் கராச்சியில் நடைபெற்ற போட்டியிலும் 56 பந்துகளில் 77 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்.
# 2011-ல் உலகக் கோப்பையில் 79 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்களை
குவித்ததும் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடித்ததும் பேசப்பட்டது.
#2011ல் மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் 31 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார் தோனி..