நாரஹேன்பிட்டியில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் பஸ் வண்டிகள் மீது தாக்குதல் நடத்திய 29 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து இன்று நாடளாவிய ரீதியில்
தனியார் பஸ் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில் பொதுமக்கள்
போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி
வருகின்றனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள
நிலையில் அதனை மீறி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் மீது இவ்வாறு
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் வண்டிகள் மீது தாக்குதல்
நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் நாடளாவிய ரீதியில் 29 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.