ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை
சார்பில் தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் சாதகமான பிரதிபளிப்புக்கள்
கிடைத்துவருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஜெனீவா நகரிலிருந்து நியுஸ் பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் தமது உரையைத் தொடர்ந்து, உரையாற்றி தாய்லாந்தின் வெளிவிகார அமைச்சர் இலங்கைக்கு பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை சார்பில் விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் நாட்டிற்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அது ஏனைய நாடுகளுக்கு சிறந்த செய்தியொன்றை வழங்குவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தைத் தவிர ஏனைய பல நாடுகள் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அணுகூலமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் மேலும் பல நாடுகள் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கடவுள்ள பிரேரணை தற்போது அமரிக்க தூதரகத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.
எவ்வாறாயினும் மார்ச் மாதம் மூன்றாம் வாரத்திலேயே பிரேரணையொன்றை கூட்டத்தொடரில் சடர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச பிரேரணையின் பிரதிகளே அமெரிக்க தூதரகத்தினால் விநியோகிக்கப்படுவதாகவும் இலங்கைக்கு எதிரான பிரேரணை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படுமா? இல்லையா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பிரதிநிதிகள் ஜெனீவாவில் தமது செய்றபாடுகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் கூறியுள்ளார்.