சுமக்க முடியாத குடும்ப வறுமை: யாழில் இளம் தாயும் மகளும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை

சுமக்க முடியாத குடும்ப வறுமை: யாழில் இளம் தாயும் மகளும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைகுடும்ப வறுமை காரணமாக இளம்பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடவரணிப் பகுதியினைச் சேர்ந்த சர்மிலா சத்தியநாதன் (வயது 21) அவரது பெண் பிள்ளையான திலக்ஷிகா (வயது 6) என்பவர்களே மேற்படிச் சம்பவத்தின் போது சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

மேற்படிப் பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது காணாமற் போயுள்ளார்.

இதனையடுத்து அப் பெண்ணும் அவருடைய மகளும் உறவினர் ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையிலேயே அவர்கள் நேற்று காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவமானது அப் பகுதிய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now