கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே சந்தேகநபருக்கு 80,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
மூன்று முதலைகள், இரண்டு மாலைப்பாம்புகள் மற்றும் ஆமை ஆகியவற்றை வைத்திருந்ததாக சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இரத்மலானை சிறிமல்உயன பகுதியைச் சேர்ந்த வீடொன்றை சுற்றிவளைத்து வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினர் இந்த விலங்கினங்களைக் கைப்பற்றினர்.
அபராத தொகையை வனவிலங்குகள் திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு நீதவான் உத்தரவிட்டார்.