முத்தரப்பு
கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ஏற்பட்ட
தோல்விக்கு அணியின் தெரிவு காரணம் அல்லவென இலங்கை அணித் தலைவர் மஹேல
ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தப்
போட்டியில் நிபுணத்துவமிக்க எந்தவொரு சுழற்பந்துவீச்சாளரும் இணைத்துக்
கொள்ளப்படாத நிலையில், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும், தமது அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒன்றிணைந்து சிறந்த முறையில் செயற்பட்டதாகவும் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்
துடுப்பாட்டத்தில் சில தவறுகளை விட்டதாக சுட்டிக்காட்டிய மஹேல ஜயவர்தன
தமது திட்டங்களில் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டதாக கூறினார்.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகள் நாளைய தினம் பேர்த் விளையாட்டரங்கில் விளையாடவுள்ளன.