யாழ் முஸ்லிம் என்ற வலை தளத்தில் ஜமாத்தே இஸ்லாமி என்ற இஸ்லாமி இயக்கம்
தொடர்பான எழுதப் பட்ட ஒரு ஆக்கம் தொடர்பில் இடப்பட்ட பின்னூட்டங்கள்
நீக்கப்பட்டதாகவும் அதனால் வாசகர்கள் உண்மைத் தகவலைத் தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிட்ட ஆக்கத்திற்கு வழங்கப்பட்ட
பின்னூட்டத்தை சகோதரர் இனாஸ் நமக்கு அனுப்பியுள்ளார் அதனை அப்படியே இங்கு
வெளியிடுகிறோம்.
''யாழ்ப்பாண முஸ்லிம் என்ற உணர்வு..! இருப்பை தக்கவைக்க உதவட்டும்''
என்ற யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் ஆக்கத்தின் கீழ் நான் பதிந்த
குறிப்புகள் தொடர்பாக சகோதரர் ஜலால் மொஹிடீன்,அபூ
மஸ்லமா,அபூ ஸைப் போன்றவர்களின் விமர்சனங்களுக்குப் பின்வரும்
பதிலை பதிவாக முன்வைக்கின்றேன்.
அஸ்மின் நளீமி என்ற தனிநபர் மீதான எந்த வெறுப்பையும் வெளிப்படுத்தும் நோக்கமோ, ஏன் வெறுப்புக்களோ கூட என்னிடமில்லை,, மாறாக ஜமாத்தே இஸ்லாமி குறித்து அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் என்ற வகையில் சமூகத்தை விழிப்பூட்டவே விரும்புகின்றேன்.

அஸ்மின் நளீமி அவர்கள், அஸ்மின் என்ற தனி நபராக, சமூகத்தின் தேவைகளை உணர்ந்து,
யாழ் முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தனது யாழ்ப்பாண முஸ்லீம்கள் தொடர்பான பணிகளை
முன்னெடுப்பாரேயானால் அவர் தொடர்பில் எவ்வித ஆட்ச்சேபனையும் இல்லை, மேலும் அவரை வரவேற்கின்றோம்.
அவர் ஜமாத்தே இஸ்லாமியின் இரகசியத் திட்டத்துக்கு அமைவாக
யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு பணி செய்வதன் மூலம் வேறொன்றை நாடுவாரேன்றால்,
வேறொன்றின் பால் சமூகத்தை இட்டுச் செல்லுவார் என்றால் அதனை வன்மையாக கண்டிப்பதும், அது குறித்து சமூகத்தை எச்சரிப்பதும்
ஒவ்வொரு யாழ் முஸ்லிமினதும் தலையாய கடமையாகும்.
அவர் இஸ்லாமிய மாணவர் அமைப்பின் தேசிய
தலைவராக கடமையாற்றியுள்ளார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது, , குறித்த
அமைப்பு ஜமாத்தே இஸ்லாமியினுடயது என்பதனை யாரும் அறியாமல் இருக்க
முடியாது. இங்கு பிரச்சினையே ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகத்தை விழுங்கும்
திட்டமிட்ட நடவடிக்கைகளே என்னும் பொழுது, அதன் மாணவர் அமைப்பில் ஒருவர்
தலைவராக இருந்தார்
என்பது,ஜமாத்தே இஸ்லாமிக்கு அவர் மிக வேண்டியவர் என்பதையே சுட்டி
நிற்கின்றது. மேலும் அஸ்மின் நளீமி அவர்களின் சமூகத்திற்கான சேவைகள்,
பணிகள் என்பன ஜமாத்தே இஸ்லாமியினால் வழிநடாத்தப் பட்டவயாகவே உள்ளன.
கடந்தாண்டு யாழ் மண்ணில் திடீர் பிரசன்னமாவதட்கு முன்னர் யாழ்ப்பாண முஸ்லீம்கள் தொடர்பான விடயங்களிலோ அல்லது அகதி முகாம்களிலோ அஸ்மின் நளீமி அறியப்பட்டிருக்கவில்லை.
இங்குள்ள முக்கிய விடயம் ஜமாத்தேஇஸ்லாமியின் நுணுக்கமாக
வடிவமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மார்க்க முரண் செயல்திட்டங்களே தவிர அஸ்மின் நளீமி என்ற தனி நபர் அல்ல.
சகோதரர் ஜெனிபர் நற்பண்புகளும், பரந்த மனப்பான்மையும், சிறந்த கல்வியறிவும், இயல்பான தலைமைத்துவப் பண்புகளும், ஆளுமையும் கொண்ட
ஒருவராக விளங்கினார். அவர் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிப்பதால் சமூகம் அவரின் சேவைகளை பெற முடியாமல் போனமை துரதிஸ்டமே.
தவறுகளை சுட்டிக் காட்டும் பொழுது, அது யாராக இருந்தாலும், தனது தவறை ஏற்று சீர் செய்ய்துகொள்ளும் ஜெனிபரின் பக்குவத்தையும், பரந்த மனப்பாங்கையும் அஸ்மின் நளீமியிடம்
அஸ்மின் நளீமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக இஸ்லாமிய மாணவர் அமைப்பின் தேசிய தலைவராக
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்
ஜெனீபர் மக்பூல் (புலிகளால் படுகொலை செய்யப் பட்ட மன்னார் அரசாங்க அதிபர் ஜனாப் மக்பூல் அவர்களின் மகன்) அவர்கள் கூட கடமையாற்றி இருந்தார்.
ஜெனீபர் மக்பூல் (புலிகளால் படுகொலை செய்யப் பட்ட மன்னார் அரசாங்க அதிபர் ஜனாப் மக்பூல் அவர்களின் மகன்) அவர்கள் கூட கடமையாற்றி இருந்தார்.
சகோதரர் ஜெனிபர் நற்பண்புகளும், பரந்த மனப்பான்மையும், சிறந்த கல்வியறிவும், இயல்பான தலைமைத்துவப் பண்புகளும், ஆளுமையும் கொண்ட
ஒருவராக விளங்கினார். அவர் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிப்பதால் சமூகம் அவரின் சேவைகளை பெற முடியாமல் போனமை துரதிஸ்டமே.
தவறுகளை சுட்டிக் காட்டும் பொழுது, அது யாராக இருந்தாலும், தனது தவறை ஏற்று சீர் செய்ய்துகொள்ளும் ஜெனிபரின் பக்குவத்தையும், பரந்த மனப்பாங்கையும் அஸ்மின் நளீமியிடம்
காண முடியவில்லையே. இதற்கு ஒரு சிறு உதாரணம் தான் ''குத்துவிளக்கு சம்பவமாகும்''.
மூன்று மதங்களின் காபிரான மதகுருமாருடன் ஒரே மேடையில், அந்நிய கலாச்சாரத்தினை பின்பற்றி ''புனித குத்துவிளக்கு'' ஏற்றியது தவறு என்பதனை அழகிய முறையில் சுட்டிக் காட்டப்பட்ட பொழுதும் கூட
அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, தான் செய்தது சரி என மார்க்கத்துக்கு முரணான முறையில், பிடிவாதமாக இருந்ததனை கண்கூடாகக் கண்ட பின்னர், அஸ்மின் நளீமி குறித்து சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
மீலாத் விழா பித்அத், மார்க்கத்தில் இல்லாத ஒன்று, அந்நிய மத வழிமுறை என்றெல்லாம் தெளிவாக தெரிந்த பின்னரும் கூட, குறித்த விழாக்களில் ஜமாத்தே இஸ்லாமியினர் பங்கெடுக்கின்றனர். அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இந்நிலையில் அனாச்சாரத்தின் பெயரால், அல்லாஹ்வின் கோவத்தை பெற்றுத்தரும் நிகழ்வின் பெயரால் யாழ் முஸ்லிம்களை ஒன்றுகூட்ட முயற்ச்சிகள் நடைபெறுகின்றது. இவாறான நிகழ்வுகளை
யாழ் சமூகத்தில் ஊடுருவ வைத்துவிட்டால், மார்க்கத்தின் மீது உண்மையில் ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுக்க மாட்டார்கள், மனதால் வெறுத்து ஒதுங்கி விடுவார்கள். இந்நிலையில் ஜமாத்தே இஸ்லாமி யாழ் முஸ்லீம்களின் ஒன்றுகூடல் என்ற பெயரில் எதிர்காலங்களிலும் மேடைகளையும் வாய்ப்புக்களையும் தனிக்காட்டு ராஜாவாக அனுபவிக்க முடியும். இந்நிகழ்வு பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
முஸ்லிம்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டியது குர்ஆனும், ஹதீசுமே தவிர, அமீர்களோ அல்லது ஜமாத்துகளோ அல்ல.
குர்ஆன்
ஹதீஸ் என்ற வரையறையை மீறி மக்களை வழிநடாத்த யார் முற்பட்டாலும் அவர்கள் முற்றாக
நிராகரிக்கப் படவேண்டும்.
அது ஜமாத்தே இஸ்லாமி அல்லது அதன் அமீர் என்று மட்டுமல்ல, அது தப்லீக் ஜமாத்தாகவோ,தவ்ஹீத் ஜமாத்தாகவோ அல்லது PJ யாகவோ கூட இருக்கலாம்.
குர்ஆன் ஹதீசுக்கு எதிரான, முரணான இயக்க/அமீர் பக்திகளை ஊட்டும் அனைவரும் நிராகரிக்கப் படவேண்டும்.
ஜமாத்தே இஸ்லாமி இன்று பல ஊர்களில் திட்டமிட்டு மாணவர்களையும்,மற்றவர்களையும் மூளைச்சலவைக்கு உள்ளாக்குவதை கண்கூடாகக் காண முடியுமாக உள்ளது.
அதீத அமீர் பக்தி அங்கே ஊட்டப் படுகின்றது. குர்ஆனையும், தூய ஹதீஸ்களையும் விட அமீரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். தெளிவாக தவறு என்று தெரியும் செயல்களைக் கூட அமீர் அனுமதித்தார்/அமீர் தடுக்கவில்லை என்ற காரணத்தை வைத்து செய்கின்றனர். அமீரும் அகார் சேரும் சொல்லும் திரிபு விளக்கங்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்கின்றனர்.
மார்க்க விடயங்களில் மற்றவர்கள் சொல்லும் எந்த விடயத்தையும் கேட்கக் கூட முடியாத அளவுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு, அமீர்/ ஜமாஅத் என்னும் குருட்டுப் பக்தி ஊட்டப் படுகின்றது. மார்க்கத்தில் சரி பிழைகளை தீர்மானிக்கும் அளவு கோலாக அமீரினதும், அகார் சேரினதும், இன்னும் சில முக்கியஸ்தர்களினதும் வார்த்தைகளும், செயல்பாடுகளும் ஆக்கப்பட்டுவிட்டன. குர்ஆன் ஹதீஸ் இலிருந்து தெளிவாக எடுத்துக் காட்டினாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மூளைச் சலவை செய்யப் பட்ட கூட்டத்தை ஜமாத்தே இஸ்லாமி உருவாக்கியிருப்பதனை தெளிவாக காணலாம்.
மார்க்க விடயங்களில் எது சரி, அது பிழை என்ற நிலை ஏற்படும் பொழுது தற்போதைய ஜமாத்தே இஸ்லாமியினர் பிழையான நிலைப்பாட்டில்,(பித்அத், ஷிர்க்) இருக்கும் கூட்டங்களுக்கு ஆதரவாகவே தமது நிலையை எடுக்கின்றனர். குர்ஆன் ஹதீஸை செயல்படுத்த முனைபவர்களை குறை சொல்வது,அவர்கள் குறித்து சமூகத்தில் தப்பபிப்பிராயத்தை உருவாக்குவது என வெளிப்படையாகவே செயல்படுகின்றனர். தமது இயக்கத்தை சாராத மார்க்க ஈடுபாடுள்ள சகோதரர்களைக் கண்டால்,சலாத்தை தவிர்க்கின்றனர் அல்லது வித்தியாசமான தொனியில் சலாம் சொல்கின்றனர். பேசும் பொழுது கூட பொடி வைத்துப் பேசுகின்றனர், நக்கல் பண்ணுகின்றனர்.
இவ்வளவும் ஏன், யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் ஜமாத்தே இஸ்லாமி வீடுடைப்பு, ரவுடித்தனம், பள்ளிகளில் அடிதடி, வெடிகுண்டு கலாச்சாரம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தது கூட மறக்க முடியாத ஒன்றாகும்.
ஏற்கனவே சொல்லப் பட்டுள்ளது போன்ற ஒரு குருட்டுப்
பக்தி கொண்ட கூட்டம் யாழ்ப்பாணத்தில் உருவாகி விடக்கூடாது, உருவாக்கப்
பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இவற்றை எழுத நேரிட்டது. மாறாக அஸ்மின் நளீமி மீதான தனிப்பட்ட எந்த வெறுப்புமல்ல.
அஸ்மின்
நளீமி அவர்கள், ஜமாத்தே இஸ்லாமியின் பிரதிநிதியாக அல்லாமல்,ஜமாத்தே
இஸ்லாமியின்
இரகசியத்திட்டன்களை செயல்படுத்துவதட்கு களமிறக்கப்பட்ட ஒருவராக
அல்லாமல், யாழ்ப்பாண முஸ்லிம் என்ற வகையில் , சமூகத்தின் மீது தூய அக்கறை
கொண்ட ஒருவராக மட்டும் செயல்படுவாரேயானால் எவ்வித ஆட்ச்சேபனையும் இல்லை.
அதே நேரத்தில் தவறுகள் சுட்டிக் காட்டப் படும் பொழுது, பிடிவாதம்
பிடிக்காமல் ஏற்றுக் கொள்ளும் மனோ பாவத்தையும் வளர்த்துக் கொள்ள
வேண்டும்.
இங்கே எதிர்க்கப்படுவது அஸ்மின் நளீமி என்ற தனி நபரோ அல்லது அவரின் சமூகத்திற்கான தூய பணிகளோ அல்ல, மாறாக ஜமாத்தே இஸ்லாமியால் யாழ் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து போடப்படும் தூண்டிலே.
இங்கே எதிர்க்கப்படுவது அஸ்மின் நளீமி என்ற தனி நபரோ அல்லது அவரின் சமூகத்திற்கான தூய பணிகளோ அல்ல, மாறாக ஜமாத்தே இஸ்லாமியால் யாழ் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து போடப்படும் தூண்டிலே.
இனாஸ்
வாசகர் இனாஸ் அவர்களால் எமக்கு அனுப்பபட்ட மின்னஞலின்
அசல் வடிவம்
மதிப்பிற்குரிய lankanow வலைத்தள நிர்வாகிக்கு,
கீழே உள்ள கடிதமும் ஆக்கமும் www.Jaffnamuslim.com தளத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டவை.
குறித்த தளம் நடுநிலையானது என இன்னும் நான் நம்புகின்றேன்.
பின்னூட்டம் நீக்கப்பட்டமை குறித்து அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
குறித்த தளம் ஏதாவது சக்திகளின் அழுத்தத்துக்கு உள்ளகியிருக்கலாம் என நம்புவதால்,
மேற்படி விடயங்களை உங்கள் தளத்தில் பிரசுரிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், அஸ்மின் நளீமி குறித்து எனக்கு எந்தவித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளும் இல்லை என்பதையும்,
ஜமாத்தே இஸ்லாமி பற்றி அனுபவ ரீதியாக நன்கறிந்தவன் என்ற வகையில், எனது கரிசனை எல்லாம், யாழப்பாண முஸ்லிம் சமூகம் ஜமாத்தே இஸ்லாமியின் இரகசிய, இஸ்லாம் சார இயக்க நோக்கங்களுக்காக அடிமைப் அடிமைப் படுத்தப் பட்டு விடக் கூடாது என்பதாகும்.

மேற்படி கடிதங்களையும், ஆக்கத்தையும் உங்கள் தளத்தில் பிரசுரித்து, சமூகத்துக்கு உண்மை தெரியவர உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
இவன்
இனாஸ்
வாசகர் இனாஸ் அவர்களால் யாழ் முஸ்லிம் வலத்தளத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்
இனாஸ்
வாசகர் இனாஸ் அவர்களால் யாழ் முஸ்லிம் வலத்தளத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்
மதிப்பிற்குரிய யாழ் முஸ்லிம் வலைத்தள நிர்வாகிக்கு,
ஜமாத்தே இஸ்லாமிக்கு யாழ்ப்பாணா முஸ்லீம் சமூகம் தாரை வார்க்கப் படக் கூடாது என்ற நோக்கத்துடனேயே எனது கட்டுரையை
எழுதியிருந்தேன். பிரசுரித்தமைக்கு மீண்டுமொரு தடவை நன்றி கூறிக்கொள்கின்றேன். அல்லாஹ் நமது நோக்கங்களை நன்கறிந்தவன் அதற்குரிய
கூலிகளை தருவானாக.
இஸ்லாமிய இயக்கங்கள் சமூகத்தில் இருப்பதில் தப்பில்லை, அவை குர்ஆன் மற்றும் சஹீகாண ஹதீஸ்களை
கொண்டு சமூகத்துக்கு வழிகாட்டும் வரை அவை வரவேற்கப்பட வேண்டும். இஸ்லாத்துக்காக இயக்கங்கள் என்ற நிலை மாற்றப் பட்டு,
இயக்கங்களுக்காக இஸ்லாம் என்ற நிலை உருவாக்கப்படுவதை ஒரு பொழுதுமே ஏற்றுக்கொள்ள முடியாது.
இயக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணான சிந்தனைகளை வளர்க்க முற்படுவதும்,

சமூகத்தை மூளைச்சலவைக்கு உள்ளாக்குவதும், இயக்க பக்தியை திணிப்பதும், சியோனிச யுக்திகளைக் கைக் கொண்டு மொத்த சமூகத்தையும்
விழுங்க நினைப்பதும் கண்டிக்கப் படத்தக்கது. இவ்வாறான செயல்பாடுகளில் இருந்து முடிந்தவரை சமூகத்தை
எச்சரித்து காப்பாற்ற வேண்டியது உங்கள் போன்ற, வர்த்தக நலனை நோக்காகக் கொள்ளாத, சமூக நலனை
விழுங்க நினைப்பதும் கண்டிக்கப் படத்தக்கது. இவ்வாறான செயல்பாடுகளில் இருந்து முடிந்தவரை சமூகத்தை
எச்சரித்து காப்பாற்ற வேண்டியது உங்கள் போன்ற, வர்த்தக நலனை நோக்காகக் கொள்ளாத, சமூக நலனை
முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஊடகங்களினதும், நேர்மையான தலைவர்களினதும் கடமையாகும்.
மேற்படி நம்பிக்கையில் தான் எனது கட்டுரையை உங்களுக்கு அனுப்பி வைத்தேன், நீங்களும் பிரசுரித்திருந்தீர்கள்.
இப்பொழுது உங்கள் நிலைப்பாட்டில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்கின்றேன், அல்லாஹ்வே அறிந்தவன்.
எனது ஆக்கம் வெளிவந்தபின், குறைந்த பட்சம் ஜமாத்தே இஸ்லாமி ஆதரவாளர்களிடமிருந்து விமர்சனங்கள், எதிர்ப்புகள் வரலாம் என எதிர்பார்த்தேன்.
எனினும் ஆச்சரியப் படத் தக்க வகையில் ஒரே ஒரு பிற்குறிப்பு மட்டுமே பதிவு செய்யப் பட்டிருந்தது. ''அனோனிமஸ்'' ஆக குறிப்பு பதிவது

தொடர்ந்தும் அனுமதிக்கப் படாததால் இந்த வரட்சி நிலையா என யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த ஒரு குறிப்பும் தற்பொழுது
நீக்கப் பட்டுள்ளமை அதிர்ச்சியைத் தருகின்றது.
உங்கள் ஊடகம் புற அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டதோ என அஞ்சுகின்றேன்.
எனது கட்டுரைக்கு இதுவரை அஸ்மின் நளீமி தரப்பிலிருந்து எந்தவித பதிலோ, தெளிவு படுத்தலோ, மறுப்போ
வெளிவராதது ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கு நேரமில்லையா அல்லது மவ்னமாயிருந்து விடயத்தை வலுவிழக்க செய்ய முயல்கின்றார்களா
என்பதனை அல்லாஹ்வே அறிவான்.
நானும் ஜமாத்தே இஸ்லாமியில் அங்கம் வகித்தவன், அவர்களின் பல்வேறு பட்ட நிகழ்வுகளில் பங்கேற்றவன், பயிட்ச்சிகளில் பங்குபற்றியவன்
என்ற வகையில் அவர்களின் நடவடிக்கைகளை, பாம்பின் கால் பாம்பறியும், என்பதற்கிணங்க நன்றாகவே அறிந்தவன்.
எப்படி ஒரு நபரை, பாடசாலை மாணவனை, வாலிபனை, ஆசிரியரை, வியாபாரியை ஜமாத்தே இஸ்லாமிக்குள் கொண்டு வருவது என்பது குறித்து நடாத்தப் பட்ட
பயிற்ச்சிகளில் நானும் பங்கு பற்றியுள்ளேன். அஸ்மின் நளீமியின் யாழ் முஸ்லிம் சமூகம் மீதான திடீர் அக்கறை ஜமாத்தே இஸ்லாமி பின்புலத்தை
கொண்ட ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமிய அறிவு பரந்துபட்ட வழிகளில் மக்களை வந்தடையும் நிலையில், இன்றைய ஜமாத்தே இஸ்லாமியின் செயல்பாடுகள் இஸ்லாத்துக்காக இயக்கம் என்ற நிலையிலிருந்து
வெளியேறி, இயக்கத்துக்காக இஸ்லாம் இன்ற நிலையை அடைந்துள்ளதை படிப்படியாக புரிந்து கொள்ள முடியுமாயிருக்கின்றது..
எனது கட்டுரை விடயத்தில் நடுநிலையை கடைப் பிடிப்பீர்கள், நீக்கப் பட்ட குறிப்பை மீண்டும் இணைத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
இதில் வேறு நோக்கங்கள் ஏதாவது இருந்தால் தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.