குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நேரத்தை ஒதுக்க முடியாது – சிறிலங்கா அதிபர்!




பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தம்மால் நேரத்தை ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

24 வது அனைத்துலக இளைஞர் கப்பல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கொழும்பு வந்துள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 275 இளைஞர்கள் பயணம் செய்யும் ‘புஜிமாறு’ கப்பலுக்குச் சென்று, அதில் வந்தவர்களிடம் பேசியபோதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாதம் உட்பட வரலாற்றில் இடம்பெற்ற அனைத்து கசப்பான சம்பவங்களையும் மறந்து விடுவதே தமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். அபிவிருத்தி இல்லாத இடத்தில் சமாதானத்தை அடைய முடியாது. அதேபோல் சமாதானம் இல்லாத இடத்தில் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியாது.

பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட பிரதேசங்களின் பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்மைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்புவதை விடுத்து, பயங்கரவாதத்தை ஒழித்தது தொடர்பாக பல்வேறு தரபினரும் கூறுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலத்தை ஒதுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now