மாலைதீவுக்குத் திண்டாட்டம் - இலங்கைக்குக் கொண்டாட்டம்


news
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியற் குழப்பம் காரணமாக அங்கு உல்லாசப்பயணத் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மாலைதீவுக்கு படையெடுக்கவிருந்த கணிசமான உல்லாசப் பயணிகள் தங்கள் பயணங்களை இரத்துச் செய்துள்ளதாக தெரியவருகிறது.

பிரிட்டனும், ஜேர்மனியும் தமது நாட்டு உல்லாசப் பயணிகளுக்கு மாலைதீவுக்கு செல்வது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

இதனால் 2012 ஆம் ஆண்டில் ஒன்பதுலட்சத்து ஐம்பதினாயிரம் உல்லாசப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடையும் முயற்சியில் இலங்கைக்கு சாதக நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் கடந்த ஆண்டிலேயே வந்துள்ளனர். ஏறக்குறைய கடந்தவருடம் 8 லட்சத்து 55 ஆயிரத்து 975 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியற் குழப்பங்கள் காரணமாக மாலைதீவக்கான பயணத்தை உல்லாசப் பயணிகள் பலரும் இடைநிறுத்திவிட்டு இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளனர். இதனால் சென்ற வருடத்தை விடவும் அதிகளவு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now