பாணின்
விலையேற்றம் தொடர்பில் பேக்கரி சங்க உறுப்பினர்களுடன் இன்றையதினம்
நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என பேக்கரி சங்கம்
தெரிவித்துள்ளது.
வரிச்சலுகை வழங்கப்படாதுவிடின் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
மீளாய்வு செய்யப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின்
தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று கூறினார்.
'வரிச்சலுகை கிடைக்காதுவிடின் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திப்
பொருட்களின் விலையை உயர்த்துவோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை
தயாரிப்பதற்கு தேவையான முக்கிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால்
எமக்கு வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் அல்லது நாம் விலையை அதிகரிக்க
வேண்டி இருக்கும் எனவும் இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர்
தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சருடனான சந்திப்பின் பின்னரே இறுதித் தீர்மானம்
எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். எரிபொருள், மின்கட்டணம் ஆகியவற்றின்
விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.