துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; பொறுப்பேற்கும் டக்ளஸ்


தமிழ்நாடு சூளைமேட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கான பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவிக்கின்றது.
 

புதிய தலைமுறை என்ற தமிழ் செய்தி அலைவரிசை ஒன்றிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தைக் கூறியுள்ளதாக IBN live என்ற இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி சென்னை சூளைமேடு பகுதியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நடத்திய பகிரங்க துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தொடர்புபட்டிருந்ததால், அதற்கான பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார் என IBN live என்ற இந்திய இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர ஆட்கடத்தல் மற்றும் குற்றவியல் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளும் நிலுவையிலுள்ளது.
எவ்வாறாயினும் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 09 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவன் ஒருவனைக் கடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் தேவானந்தா உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக IBN live என்ற இந்திய இணையத்தளம் வெளியிட்டுள்ள  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now