பொலிஸ் சேவைக்கு 1600 தமிழர்கள் சேர்க்கப்படுவர்: கோட்டாபய

வடக்கு கிழக்கில் பணியாற்றுவதற்காக சுமார் 1600 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1600 தமிழர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியுடனான சந்திப்பின்போது கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ தற்போது டோக்கியோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்தஅறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் வெளிநாடுகளிலிருந்து சுமார் 20,000 தமிழர்கள் தமது குடும்பத்தினர் உறவினரை சந்திப்பதற்காக வடக்கு கிழக்கு வந்ததாகவும்  கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 5000 பேர்  திரும்பி வந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.   யுத்தகாலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், நாட்டில் அமைதியும் நிலவுகிறது என்ற நம்பிக்கையுடன் நாடு திரும்புவதை வெளிப்படுத்துவதால் இது மிக முக்கியமானது என அவர்கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now