இலங்கைப்
பாராளுமன்றில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை படிக்கப்பட்டது. இது தொடர்பான
விவாதங்களும் இடம்பெற்றது. இவ்விவாதங்களில் கலந்துகொண்ட எதிர்கட்சித்
தலைவர் ரணில் தனது கருத்துக்கள் எதனையும் பதிவுசெய்யவில்லை.
ஆழும்
மகிந்தரின் கட்சி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டதை ஆமோதிப்பது போன்று
உட்காந்திருந்தார். பின்னர் மாலை சபை நிகழ்வுகள் முடிவடைந்ததும், வெளியே
வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பாராளுமன்றில் நீங்கள்
வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தீர்களா ? இல்லை ஆமோதித்தீர்களா ? என்று
கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் எதற்கும் பதிலளிக்காத ரணில் அவ்விடத்தில்
இருந்து ஓட ஆரம்பித்துள்ளார். திடீரென ஓட ஆரம்பித்த ரணில் தனது கார்
கதவுகளை தாமே திறந்து அதில் ஏறி உட்கார்ந்தார்.
எங்கோ காத்திருந்த அவரது, சாரதி தாமும் ஓடிவந்து அவரது காரை ஸ்டாட் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். இப்போது நாம் என்ன கேட்டுவிட்டோம் என்று இந்த மனிசன் இப்படி ஓடுகிறார் என்று எதுவும் புரியாத நிலையில் நிருபர்கள் இருக்க, பின்னர் தான் தெரிந்ததாம் அவர் பாராளு மன்றில் வாயே திறக்கவில்லை என்று.

பின்னர்
எப்படி நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியும் ? ரணில் மகிந்தர்
பக்கம் சாய்ந்திருப்பதாகவும், இல்லையேல் மகிந்தரை எதிர்க்கக்கூடாது என்ற
நிலையில் தான் இருந்துவருவதாகவும், அவர் கட்சியில் உள்ள பிரமுகர்களே
குற்றஞ்சாட்டி வந்துள்ள நிலையில், இச் செய்திகளும் வெளியாகியுள்ளது. இனி
சும்மா விடுவார்களா என்ன ?