மக்களூக்கு எதிரான அடக்குமுறையில் அரசு: கரு குற்றச்சாட்டு!



அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைக் கையாள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திப் போராடும் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கையாள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிலாபத்தில் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சிறந்த உதாரணமாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக மக்களைப் பலிக்கடாவாக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now