ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாரதி
ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டணை விதித்துள்ளது.
813.3 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்
பொருளை தன்வசம் வைத்திருந்ததாகவும் போதைப் பொருள் விற்பனையில்
ஈடுபட்டதாகவும் குறித்த சாரதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.