எனது பையன்களை கவனிக்கச் சொன்னால்
அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே
நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என
திருவாக்கு மலர்ந்துள்ளார்
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. நேற்று மாலை தனது சிறீதர் திரையரங்கில்
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து
உரையாடினார். அவ்வேளை அங்கு சமூகமளித்திருந்த வடக்கு மாகாண ஆளுநரது
செயலாளரான எல்.இளங்கோவன் எனும் அதிகாரி பத்திரிகையில் வெளிவந்த செய்திகளது
நறுக்குகள் சிலவற்றை அமைச்சரிடம் காண்பித்தார்.
கப்பட்டிருந்த நீச்சல் தடாகம் தொடர்பான
செய்தியொன்று வெளியாகியிருந்தது. வன்னியில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளில்
வகுப்பறைக்கட்டிடங்கள்; எதுவுமே இல்லையெனவும் மரங்களின் கீழேயே மாணவர்கள்
தரையில் அமர்ந்து கல்வி கற்று வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தன நாளிதழ்
செய்திகள். இந்நிலையில் அப்பாடசாலைகளில் சிறு திருத்தங்களை மேற்கொள்ளவென
ஒதுக்கப்பட்ட ஜந்து மில்லியனை நீச்சல் தடாக அலங்கரிப்பிற்கென ஒதுக்கியது
நியாயமாவென கேள்வி எழுப்பியிருந்தன.
இது தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த
செய்திகளது நறுக்குகள் சிலவற்றையே வடக்கு மாகாண ஆளுநரது செயலாளரான
எல்.இளங்கோவன் எனும் அதிகாரி அமைச்சரிடம் காண்பித்துள்ளார்.இதனால்
சீற்றமடைந்த அமைச்சர் அங்கு பிரசன்னமாகியிருந்த வேலையற்ற பட்டதாரிகளிடையே
உரையாற்றிய அமைச்சர் எனது பையன்களை நேரில் போய் அவர்களை கவனிக்க சொன்னால்
அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள்.
இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே
நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என
கூறினார்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்
உதயன் நாளிதழ் மீது 2006ம் ஆண்டில் இடம்பெற்ற தாக்குதல் ஈபிடிபியாலும்
அவர்களோடு இணைந்த கடற்படையினராலும் நடத்தப்பட்டதாக பஸில் ராஜபக்ஸவை
மேற்கோள் காட்டி அமெரிக்க தூதரகம் அனுப்பிய குறிப்பு மூலம் அண்மையில்
விக்கிலீக்ஸினால் அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.இத்தகைய சூழலிலேயே
அமைச்சர் இவ்வாறு திருவாய் மலர்ந்துள்ளார்.