கஹவத்தை,
கொட்டகெத்தன பகுதியில் ஜனவரி 31ஆம் திகதிக்கும் பெப்ரவரி 2ஆம் திகதிக்கும்
இடையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு
பொதுமக்களின் உதவியை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி)
நாடியுள்ளது.52 வயதான நயனா நில்மினி எனும் பெண்ணும் அவரின் 19 வயது மகளான காவிந்தியா சத்துராங்கனி என்பவருமே கொலைசெய்யப்பட்டனர். தேடுதலின்போது அவர்களின் உடல் ஒபாத பகுதியிலுள்ள காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் சி.ஐ.டியுடன் 232-8138 அல்லது 242-2176 ஆகிய தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.


