அமேரிக்காவின் புளுகு மூட்டைகள்


ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைப்பதற்காக, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தீர்மானமொன்றை வரைவதற்கு தன்னுடன் இலங்கை இணங்கியுள்ளது என ஜெனீவாவிலுள்ள இராஜந்திர வட்டாரங்களில் அமெரிக்கா வதந்தி பரப்புகிறது என ராஜதந்திர வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

பேரவையின் அங்கத்துவ நாடுகள் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை மேற்கொள்வதை அதைரியப்படுத்துவதற்காக அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவ்வட்டார்ஙகள் தெரிவித்தன.
தற்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படக்கூடிய தீர்மானங்களை தோற்கடிப்பதற்கு நட்பு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக ராஜதந்திர போராட்டத்தை இலங்கை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'இத்தீர்மானத்தை இணைந்து வரைவதற்கு நாம் இணங்கியுள்ளதாக அவர்கள் வதந்தி பரப்புகிறார்கள். இதன் மூலம் இத்தீர்மானத்துக்கு இலங்கையும் ஆதரவளிப்பதாக அங்கத்துவ நாடுகளை நம்பவைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இத்தீர்மானத்தை இலங்கையின் சம்மதத்துடனேயே அமெரிக்கா கொண்டுவருகிறது என அங்கத்துவ நாடுகள் நம்பினால் அவை இதை பாரதூரமாக கருதமாட்டா. இது ஒரு சூழ்ச்சி. இத்தகைய வதந்திகள் ஸ்திரமடைவதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை' என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை புதிய நிலைவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் கேட்டபோது, இலங்கை எவருடனும் அத்தகைய நடவடிக்கைக்கு இணங்கப்போவதில்லை எனக் கூறினார். ' 'இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் ராஜதந்திரிகளுக்கு இது குறித்து நாம் அறிவிப்போம் என  அவர் கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now