சனத்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுவதை உறுதிப்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல்  மார்ச் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள அகில இலங்கை ரீதியான சனத்தொகை கணக்கெடுப்பில் தாம் கணக்கெடுக்கப்படுவதை மக்கள் உறுதிசெய்ய வேண்டுமென  தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

சகல பிரஜைகளும் சரியான தகவல்களை வழங்குவதும். மக்கள் வழங்கிய தகவல்களை திணைக்கள ஊழியர்கள் இரகசியமாக வைத்திருப்பதும் சட்டப்படி கட்டாயமானதாகும் என திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டி.பீ.பி. வித்தியாரட்ன கூறினார்.

வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு உத்தியோகஸ்தர்களை அணிந்திருக்கும் தொப்பி, அவர்கள் வைத்திருக்கும் சனத்தொகை, வீடுகள் தொகைமதிப்பு இலச்சினையுடன் கூடிய கோவை என்பவற்றின் 5லம் அடையாளம் காண முடியும் எனவும் மேற்படி உத்தியோகஸ்தர்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் வைத்திருப்பவர் எனவும் அவர் தெரிவித்தார்.

வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் மார்ச் 19 ஆம் திகதி அவர்கள் இரவில் படுத்துறங்கும் இடத்தில் வைத்து கணக்கெடுக்கப்படுவர். இவர்கள் கணக்கெடுக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிசெய்யும் அடையாள அட்டையொன்றும் இவர்களுக்கு வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை இலக்கம், பிறந்த திகதி, மாவட்டம், கல்வித் தகைமைகள், தொழிற்பயிற்சி, தொழில்வாண்மை, கணினி அறிவு, தொழில், பொருளாதார செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படவுள்ளதால் மக்கள இவற்றை ஆயத்தமாக வைத்திருப்பது வேலையை இலகுவாக்கும் என அவர் கூறினார்.

தேவையானோருக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் சனத்தொகை, வீடமைப்பு தொடர்பில் சரியான  தரவுதளத்தைப் பேணவும் கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகள் உதவும் என வித்தியாரட்ன கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now