ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் பங்குகொள்ளாதிருப்பதாக
எடுக்கப்பட்ட முடிவு தனது தனிப்பட்ட முடிவு அல்ல எனவும் அது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் முடிவு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டமை தொடர்பில் அத தெரண தமிழிணையம் இரா.சம்பந்தனுடன் இன்று (27) மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
கேள்வி:- அத தெரண தமிழிணையம் - ஜெனீவா விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக எடுக்கப்பட்ட முடிவு சம்பந்தனின் தனிப்பட்ட முடிவா?
பதில்:- இரா.சம்பந்தன் - இல்லை. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு.
கேள்வி:- அத தெரண தமிழிணையம் - ஜெனீவா கூட்டத்தொடர் புறக்கணிப்பு சம்பந்தன், சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என உங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளாரே அது உண்மையா?
பதில்:- இரா.சம்பந்தன் - இல்லை. தவறு அவர் நாடு திரும்பியதும் என்னை சந்திக்கும் போது அது குறித்து விளக்கமளிப்பேன்.
கேள்வி:- அத தெரண தமிழிணையம் - ஜெனீவா மாநாட்டை புறக்கணித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மற்றுமொரு துரோகம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள உண்மை தன்மை என்ன?
பதில்:- இரா.சம்பந்தன் - இவ்வாறான ஒருசிலரது குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியாது. ஜெனீவா மாநாட்டிற்கு நாங்கள் கடைபிடிக்கும் வழிமுறைகளை ஊடகங்களில் அம்பலப்படுத்த முடியாது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள எமது நேச நாடுகளுடன் உரையாடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபெற்று அதன் பின்னரே ஜெனீவா செல்லாதிருக்க முடிவு செய்தோம். நாங்கள் அங்கு செல்லவில்லையே தவிர, எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். நாங்கள் ஜெனீவா மாநாட்டை புறக்கணிக்க அரசு தரப்பில் இருந்து எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை.