பேஸ்புக் நிறுவனத்தின் முதலாவது தலைமை செயலகம் அமைந்துள்ள
கலிபோர்னியாவின் பாலோ அல்டோவில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் டேவிட்
கோ எனும் இளைஞர் கிறுக்கல் ஓவியங்களை வரைந்து கொடுத்தார்.
அவரது வித்தியாசமான ஓவியங்களால் வியந்து போன பேஸ்புக் நிறுவனர் மார்க்
சூக்கர்பேர்க் அதற்குரிய பணத்தை கொடுப்பதற்கு யோசித்தார். ஆனால் அப்போது
பேஸ்புக் அவ்வளவு பிரபலமாகாத நேரம்.
பாலோ ஆல்டோ அலுவலகத்தில் கோவின் ஓவியங்களுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் சூக்கர்பேர்க்கும் அவரது நண்பர்களும்
உங்களுக்கு பணம் வேண்டுமா? அல்லது பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள்
வேண்டுமா? என கேட்க, 'நான் பாட்னர் ஆகிறேன்' என்றார் டேவிட் கோ. விளைவு,
இன்றைய நிலையில் அமெரிக்க பங்கு சந்தையில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க
டாலர்களுக்கு புரள போகும் பேஸ்புக் பங்குகளை அதன் தொடக்க காலத்திலேயே
கொள்வனவு செய்து இப்போது மில்லினர்களாக ஆகப்போகும் 1000 பேர்களில் டேவிட்
கோவும் ஒருவர். 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதிக்கு அவரது
பங்குகள் புரளவிருக்கின்றன.
ஆனால் அது அவரது அதிஷ்டம் என்று மட்டும்
சொல்ல முடியாது. திறமையும் தான். பேஸ்புக் நிறுவனத்தின் தற்போதைய மெல்னோ
பார்க் தலைமை அலுவலகத்தின் சுவர்களிலும் இவர் தான் ஓவியம் வரைகிறார்.
இடது கை ஓவியக்காரரான இவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஓவியம் வரையும் அளவுக்கு இப்போது வாய்ப்புக்கள் குவிந்துள்ளது.