எரிபொருள் மானியம் வழங்கப்படும் என அரசாங்கம் கூறிவருவது பொய் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்ட இந்தவொரு எரிபொருள் மானியமும் வழங்கப்படவில்லை என கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அரசின் உறுதியின்படி கொழும்பு - கண்டி செல்லும் தனியார் பஸ்களுக்கு 8000 ரூபா எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலையை உயர்த்தியதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை எனவும் அவ்வாறு உண்மை என்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருக்க வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.