பெற்றோல் டீசல் மண்ணெண்னை என்பவற்றின் விலைகள் ஏற்றப்பட்டுள்ள செய்தி பொது மக்களுக்கு இடியாக விழுந்திருக்கிறது.
ஊடகங்களுக்கு குறிப்பாக அரச எதிர்ப்பு ஊடகங்களுக்கு இந்தச் செய்தி ஒரு தீனியாக கிடைத்திருக்கிறது. மக்களுக்கு அரசு போட்ட கஷ்ட கால அணு குண்டாகவே இதனை ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
அமெரிக்க எதிர்ப்பு நாடுகளில் இரண்டு வகையான நாடுகள் இருக்கின்றன அதில் ஒரு வகை நேரடியாகவே அமெரிக்காவை எதிர்ப்பவை இன்னொரு வகையினர் அரசியல் கருத்துக்களை எதிர்த்து அமெரிக்காவின் சழுகைகளுக்காக வெளிப்படையாக அமெரிக்காவை எதிர்காமல் இருப்பவைகள்.
இதில் இரண்டாவது வகையில் தான் இலங்கை அரசு இணைந்து கொள்கிறது.
இருதிக் கட்ட யுத்தம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்களுக்கு இலங்கை மாற்றம் தெரிவித்தாலும்இ அமெரிக்க உதவிகளை பெற்றுக் கொள்வதில் முன்னிலையில் நிற்கிறது. தெளிவாகக் கூறுவதானால் அமெரிக்க உதவியின்றி இலங்கை தனது செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றே சொல்ல வேண்டும்.
சீனாஇ ரஷ்யா மத்திய கிழக்கு அரபு நாடுகள் என சில முக்கிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குகின்றது. இது கூட முழுமையாக அமெரிக்காவின் பக்கம் இலங்கை சாய்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கான உந்து சக்திதான் என்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பெட்ரோல் விலையேற்றம் சரி செய்யுமா இலங்கை?
இது இப்படியிருக்க ஈரானுக்கும்இ அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகள் நிலை இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது.
ஈரானின் தோழமை நாடுகளில் மிக முக்கியமாக கண்காணிக்கப்படும் இலங்கை ஈரான் விஷயத்தில் சரியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் திண்டாடுவது அமெரிக்காவுக்கு தெரிந்த விஷயம் அதனால் தான் தான் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் பகடைக் காயாக இலங்கையை அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.
ஆம் இலங்கையில் விநியோகிக்கப்படும் எரிபொருளில் 92 சதவீதமானவை ஈரானின் தயாரிப்பாகும்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் ஆயுத மோதலாக மாறுவதற்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேலை அதன் முதல் கட்டமாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 19 சதவீதமான எரிபொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்தை தன் வசப்படுத்தியதின் மூலம் அமெரிக்கா தடுத்துவிட்டது.
உலகின் பெற்றோல் ஏற்றுமதியில் 2வது இடத்தில் இருக்கும் ஈரான் மூன்று மாத தவணைக் கடன் அடிப்படையில் இலங்கைக்கு பெற்றோலை விநியோகம் செய்து வருகின்றது.
அது மட்டுமன்றி இலங்கையில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஈரான் எண்ணையைத் தவிர மற்ற நாட்டு எண்ணைகளை சுத்திகரிக்கும் வசதிகள் இது வரைக்கும் செய்யப்படவில்லை என்பது இலங்கை அரசின் முன்னெச்சரிக்கை தன்மையில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியா போன்ற பெரும் நாடுகள் ஈரானில் இருந்து பெற்றோலை தாம் இறக்குமதி செய்வோம் என்று தைரியமாக அறிவித்திருக்கும் இந்நேரம்இ மெல்லவும் முடியாமல்இ துப்பவும் முடியாமல் அமெரிக்காவின் மிரட்டலுக்கும் ஈரானின் இலவசத்திற்கும் இடையில் இலங்கை அரசு மாட்டிக் கொண்டுள்ளது என்பது தெளிவான விஷயம்.
மக்கள் மனம் இந்த நெருக்கடியை ஏற்றுக் கொள்ளுமா?
யுத்தத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார நிலையில் பல தடவை மாற்றத்தினை சந்தித்த இலங்கை மக்கள் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படிஇ இன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்பட்டுள்ள எரிபொருட்களின் விலைறேறம்இ பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும்இ ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும்இ மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை35 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
யுத்தத்தில் அரசாங்கம் அடைந்த வெற்றியை வைத்து இது வரைக்கும் அரசு தனது திட்டங்களை நடை முறைப்படுத்தியதைப் போல் இம்முறை மக்களை ஒரு மனநிலைக்கு கொண்டு வருவது என்பது அரசுக்கு எட்டாக் கணியாகத் தான் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஏற்கனவே பல விஷயங்களில் அரசின் நட்வடிக்கைகளில் வெருப்பில் இருக்கும் மக்களுக்கு எரிபொருள் விலையேற்றம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத பெரும் சுமை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
நிலைமையை சமாளிக்குமா இலங்கை? பொருத்திருந்து பார்ப்போம்.