
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக
நிர்மாணிக்கப் பட்டுள்ள நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி அவர்கள்
உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனையடுத்து
சாவகச்சேரிக்கு விஜயம் செய்யும் அவர், அரசாங்க மருத்துவமனையில் புதிதாக
நிர்மாணிக்கப் பட்டுள்ள கட்டிடத் தொகுதியையும் திறந்து வைப்பார். இந்
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள்
பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட வுள்ளார்.
ஜனாதிபதியின்
மேற்படி விஜயத்திற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு
ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
தெரிவித்தார்.

