
தொழிலற்றவர்களையும்,
தொழில் வழங்குனர்களையும் தொடர்புபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள
www.nhrdc.net என்ற புதிய இணைய தளத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அநுராதபுரம்,
ஓயாமடுவில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி
கண்காட்சி பூமியில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்
அபிவிருத்தி அமைச்சு காட்சி கூடத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் இந்த புதிய
இணைய தளத்தை ஆரம்பித்து வைத்தார். அமைச்சர் டலஸ் அழகப் பெரும,
பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்க உட்பட அமைச்சர்கள் பலர் இந்த நிகழ்வில்
கலந்து கொண்டனர்.
தொழில்
தேடுபவர்கள், தொழிலை எதிர்பார்த்து இருப்பவர்களையும், தொழில் வழங்குனர்களை
இணைய தளத்தின் ஊடாக நேரடியாக தொடர்புபடுத்தும் வகையிலேயே இந்த புதிய
இணையதளம் (ஷிழிறி நிலிகிஷி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்
டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மனதி
வளங்கள் அபிவிருத்தி சபை (னிசிஞிளிவி) இந்த இணைய தளத்தை உருவாக் கியுள்ளது.
மஹிந்த
சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொழில்வாய்ப்பற்றவர்களுக்கு
தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

