பீதியைக் கிளப்பி இருக்கும் வெடிகுண்டு மீட்பு!


நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் வெடிகுண்டுகள் - நாளைய ஆர்ப்;பாட்டத்தை நிறுத்தவா? - மக்கள் சந்தேகம்!
 கொழும்பு நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயமான குறித்த பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள டி.ஐ.ஜி காரியலயத்திற்கருகில் இருந்து இரண்டு குண்டுகளும், வாழைத்தோட்டப்பகுதியல் இருந்து 8 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதியான  சரத்பொன்சேக்கா கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவையொட்டி நாளைய தினம் நீதிமன்றத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இன்று வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நாளைய ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே வெடிகுண்டுகள் குறித்த பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் வைக்கப்பட்டிருக்கலாம் என  மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது குறித்த பகுதியில் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினரும், குண்டு செயலிழக்கும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா? என காவற்துறையினர் தேடுதல் நடத்திவருவதுடன் பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளை கொடி வழக்கின் தீர்ப்பு நாளைய தினம் விசாரணைக்கு வருகிறது
 
வெள்ளை கொடி வழக்கின் தீர்ப்பு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு நாளைய தினம் (08) நீதியரசர் ஸ்ராணி பண்டாரநாயக்க தலைமையில் 4 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
 
நிமால் காமினி அமரதுங்க, பி.ஏ. ரத்நாயக்க, பியசாத் டெப், சத்திய ஹெட்டிகே ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில், இந்த விசாரணை நடைபெறவுள்ளது.  சரத் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கை விசாரித்த மூவர் அடங்கிய நீதிபதிகளில், இருவர், சரத் பொன்சேக்கா மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துடன், ஒரு நீதிபதி மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்திருந்தார். இந்த நிலையில், இரண்டு நீதிபதிகளில் தீர்ப்பு எதிராகவே சரத் பொன்சேக்கா இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். 
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now