
மாலைதீவு
அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து
எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில்
பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளார்.மாலைதீவு ஜனாதிபதியால் சில வாரங்களுக்கு
முன்னர் அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு
இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததனையடுத்து மாலைதீவில் அமைதியின்மை
ஏற்பட்டது தெரிந்ததே


