காலி ரத்கம களப்பிலிருந்து மீன்கள் திடீரென உயிரிழந்துள்ளதாக மீனவ சங்கம்
தெரிவித்துள்ளது. இயற்கையாக அமைந்த முகத்துவாரம் மூடப்பட்டமையே இதற்கான
காரணம் என ரத்கம களப்பு பாதுகாப்பு மீனவ சங்கத்தின் செயலாளர் கே.கே பியரத்ன
குறிப்பிட்டுள்ளார். |
|
இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் தெளிவு படுத்தப்பட்டுள்ள போதிலும் தமது
பிரச்சனைக்கு இதுவரை தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படவில்லை என பியரத்ன
கூறியுள் ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலட்சக்கணக்கான மீன்கள்
இந்த களப்பில் உயிரிழந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இயற்கையாக அமைந்த முகத்துவாரம் மூடப்பட்டுள்ளமையினால், நீர் வெளியேறுவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த பகுதியில் மீன்களுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்கவில்லை எனவும் அதனால் மீன்கள் உயிரிழந்துள்ளதாகவும் ரத்கம களப்பு பாதுகாப்பு மீனவ சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார். இதேவேளை இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு இன்றைய தினம் தமது அதிகாரிகளை அப்பகுதிக்கு அனுப்பி வைப்பதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் பிரேமரத்ன உறுதியளித்தார் |
காலி முகத்துவாரம் மூடப்பட்டமையால் மீன்கள் உயிரிழப்பு! ஆராச்சியில் அதிகாரிகள் குழு.
Labels:
இலங்கை

காலி ரத்கம களப்பிலிருந்து மீன்கள் திடீரென உயிரிழந்துள்ளதாக மீனவ சங்கம்
தெரிவித்துள்ளது. இயற்கையாக அமைந்த முகத்துவாரம் மூடப்பட்டமையே இதற்கான
காரணம் என ரத்கம களப்பு பாதுகாப்பு மீனவ சங்கத்தின் செயலாளர் கே.கே பியரத்ன
குறிப்பிட்டுள்ளார்.