திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று மேலும் மூன்று புத்த மதத்
துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். இருவர்
கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், தர்மசாலாவில் வசித்து
வரும், தலாய்லாமா நாடு திரும்பக் கோரியும், கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை
16 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர். |
|
இந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செடா பகுதியில், மூன்று
துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் இறந்து விட்டார். இருவர்,
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளதாக,பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கும் "சுதந்திர
திபெத்" என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தையடுத்து, திபெத் தன்னாட்சி கோரி, தீக்குளித்தோரின் எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளது. தொடர் தீக்குளிப்புகளை அடுத்து, சிச்சுவான் மாகாணத்தில் சீனா பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. |
மூன்று பௌத்த பிக்குகள் தீக்குளிப்பு.
Labels:
உலகம்

திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று மேலும் மூன்று புத்த மதத்
துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். இருவர்
கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், தர்மசாலாவில் வசித்து
வரும், தலாய்லாமா நாடு திரும்பக் கோரியும், கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை
16 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர்.