பீகாரில் நடைபெறவுள்ள உலக கிண்ண கபடி போட்டியில் 16 சர்வதேச அணிகள் பங்குபற்றவுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை, இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, அமெரிக்கா, நேபாலம்,
மெக்சிகோ, மலேசியா, சீனா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகள் இதில்
பங்கேற்கின்றன.
இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, பீகார் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



