ஒமந்தை
முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63கிலோ மீற்றர் தூரத்திற்கு
முதற்கட்டமாக மிதிவெடியகற்றும் பணிகள் பூர்த்தி யாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தையிலிருந்து
யாழ்ப்பாணம் வரையான 138 கிலோ மீற்றர் புகையிரதப்பாதையில் மிதிவெடி அகற்றும்
பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிதிவெடி அகற்றும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டு ஒமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் இதுவரை 63
கிலோ மீற்றர் தூரம் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இம்மிதிவெடி அகற்றும் பணியில் புகையிரதப்பாதை அமைக்கும் இந்தியாவின் நிறுவனத்தோடு இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


